சர்வதேச ரசாயன, உர சந்தையில் இந்தியாவின் சொந்த மாடலை உருவாக்க வேண்டும்: மன்சுக் மாண்டவியா அழைப்பு
|சர்வதேச ரசாயனம் மற்றும் உர சந்தையில் தலைமை வகிக்க இந்தியா தனது சொந்த மாடலை உருவாக்க மத்திய சுகாதார மந்திரி அழைப்பு விடுத்து உள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் ரசாயனம் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் ஆலோசனை மன்றத்தின் 3-வது கூட்டம் இன்று நடந்தது. இதில், மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டார். அவர் பேசும்போது, இந்திய ரசாயனம் மற்றும் பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலை ஆனது, தேச வளர்ச்சி ஊக்குவிப்புக்கான ஒரு முக்கிய பங்கு வகிப்பதில், பேராற்றலுடன் திகழ்கிறது.
ரசாயனம் மற்றும் உரங்களுக்கான சர்வதேச சந்தையில் தலைமை வகிக்க இந்தியா தனது சொந்த மாடலை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
ஒருங்கமைக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கான வளர்ந்து வரும் தேவைகள் மற்றும் சர்வதேச தேவைகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையிலான, வருங்காலத்திற்கு உரிய உயர்மட்ட திட்டங்களை உருவாக்கும்படி நிறுவனங்களிடமும், ஆலோசனை மன்றத்திலும் அவர் கேட்டு கொண்டார்.
ரசாயனம் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் பிரிவானது, பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா, மேக் பார் தி வேர்ல்ட் போன்ற தொலைநோக்கு பார்வையுடன் ஒன்றிணைந்து செயல்பட்டு, இந்தியாவை சர்வதேச உற்பத்தி மையம் ஆக உருமாற்ற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.