இந்தியாவில் வாராக்கடன்கள் விகிதம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவு
|வங்கிகளின் வாராக்கடன்களின் மொத்த அளவு 6 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிந்துள்ளது.
புதுடெல்லி,
வங்கிகளின் வாராக்கடன்களின் மொத்த அளவு 6 ஆண்டுகளில் இல்லாத அளவு 5.9 சதவீதமாக சரிந்துள்ளது. 2022 மார்ச் இறுதியில் பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளின் வாராக்கடன்களின் மொத்த அளவு 5.9 சதவீதமாக குறைந்துள்ளது.
ஆனால், இந்தியாவுடன் ஒப்பிடத்தக்க நாடுகளின் பட்டியலில் வாராக்கடன் விகிதத்தில் இந்திய முன்னிலையில் உள்ளதாக கேர் எட்ச் நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் வாராக்கடன் விகிதம் 5.2 சதவீதமாகவும், பிரான்சில் 2.7 சதவீதமாகவும், இந்தோனேஷியாவில் 2.6 சதவீதமாகவும், சீனாவில் 1.8 சதவீதமாகவும் உள்ளது.
பிரிட்டனின் வாராக்கடன் விகிதம் 1.2 சதவீதமாகவும், அமெரிக்காவில் 1.1 சதவீதமாகவும் மிகக் குறைந்த அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 8.3 சதவீத வாராக்கடன்களுடன் இந்த பட்டியலில் ரஷியா முதல் இடத்தில் உள்ளது.
இந்தியாவில் விவசாயத்துறையில் வாராக்கடன்களின் அளவு 9.4 சதவீதமாகவும், உற்பத்தித்துறையில் 8.4 சதவீதமாகவும், சேவைத்துறையில் 5.8 சதவீதமாகவும் உள்ளன.