< Back
தேசிய செய்திகள்
ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து: ஆழ்ந்த கவலை அளிப்பதாக பிரதமர் மோடி டுவீட்
தேசிய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து: ஆழ்ந்த கவலை அளிப்பதாக பிரதமர் மோடி டுவீட்

தினத்தந்தி
|
19 May 2024 6:07 PM GMT

அசர்பைஜானை ஒட்டியுள்ள ஈரானின் ஜல்பா நகரில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி (வயது 63). இவர் இன்று காலை அண்டை நாடான அசர்பைஜானுக்கு சென்றிருந்தார். அசர்பைஜான் - ஈரான் இடையே பாயும் அரஸ் ஆற்றின் குறுக்கை புதிதாக அணை கட்டப்பட்டுள்ளது. அந்த அணை திறப்பு விழாவிற்காக இப்ராகிம் ரைசி இன்று அசர்பைஜான் சென்றிருந்தார்.

அந்நாட்டு பயணத்தை முடித்துவிட்டு இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் மூலம் ஈரான் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அசர்பைஜானை ஒட்டியுள்ள ஈரானின் ஜல்பா நகரில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்ராகிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக கருத்தப்படும் பகுதியில் கடுமையான மழை மற்றும் பனி மூட்டம் இருப்பதால் மீட்புப்பணிகள் தாமதாமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெலிகாப்டரில் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரியும் பயணித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஹெலிகாப்டரில் பயணித்த ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி, வெளியுறவுத்துறை மந்திரி உள்ளிட்டோரின் நிலை குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதளத்தில், "ஈரான் அதிபர் ரைசியின் ஹெலிகாப்டர் விமானம் தொடர்பான செய்திகளால் ஆழ்ந்த கவலையடைகிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் ஈரானிய மக்களுடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம், அதிபர் மற்றும் அவரது சக அதிகாரிகளின் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்கிறோம்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்