< Back
தேசிய செய்திகள்
மோடி பிரதமரான பிறகு சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து இருக்கிறது - ராஜ்நாத் சிங்
தேசிய செய்திகள்

மோடி பிரதமரான பிறகு சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து இருக்கிறது - ராஜ்நாத் சிங்

தினத்தந்தி
|
20 Nov 2023 3:45 AM IST

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசு, தேர்வு வினாத்தாள் கசிவு முறைகேடு மற்றும் மோசமான சட்டம்-ஒழுங்கு நிலவரம் உள்ளிட்ட பல்வேறு மோசமான செயல்பாடுகளுக்கு காரணமாக இருந்துள்ளது என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

ஜெய்ப்பூர்,

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு புதிய அரசை அமைப்பதற்கு காங்கிரசும், பா.ஜனதாவும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் ஷாபுராவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் மத்திய ராணுவ மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான ராஜ்நாத் சிங் உரையாற்றினார். அப்போது அவர் மாநில காங்கிரஸ் அரசை கடுமையாக குறை கூறியதுடன், பிரதமர் மோடியையும் வெகுவாக பாராட்டினார்.

தனது உரையில் அவர் கூறியதாவது:-

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசு, தேர்வு வினாத்தாள் கசிவு முறைகேடு மற்றும் மோசமான சட்டம்-ஒழுங்கு நிலவரம் உள்ளிட்ட பல்வேறு மோசமான செயல்பாடுகளுக்கு காரணமாக இருந்துள்ளது. தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாதவர்கள் ஆட்சியில் இருக்க உரிமை இல்லை. தேர்தல்கள் அரசை அமைப்பதற்கு மட்டுமல்ல. மாறாக, சமூகத்தையும் நாட்டையும் கட்டியெழுப்புவதற்காகவும் நடத்தப்படுகின்றன.

சாதி, இனம், மதம் போன்றவற்றின் அடிப்படையில் அரசு இயங்கக்கூடாது. மனிதாபிமான அடிப்படையில் இயங்க வேண்டும். பாரதம் தற்போது பலவீனமாக இல்லை. அது கூறுவதை உலகமே கவனமாக கேட்கிறது. மோடி பிரதமரான பிறகு, சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து உள்ளது.

இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

மேலும் செய்திகள்