< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
குஜராத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடக்கம்
|1 July 2023 3:19 AM IST
700 மெகாவாட் திறன் கொண்ட இந்த அணு உலை நேற்று வர்த்தக ரீதியான மின் உற்பத்தியை தொடங்கியது.
புதுடெல்லி,
குஜராத்தின் காக்ரபார், அரியானாவின் கோராக்பூர், மத்திய பிரதேசத்தின் சுட்கா, கர்நாடகாவின் கைகா ஆகிய பகுதிகளில் 10 அணு மின் உலைகளை அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தது.
முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த அணு உலைகளை நிறுவும் பணிகளை இந்திய அணுமின் கழகம் (என்.பி.சி.ஐ.எல்.) மேற்கொண்டு வந்தது. இதில் முதலாவது உலை குஜராத்தின் காக்ரபார் அணுமின் நிலையத்தில் நிறுவப்பட்டது.
700 மெகாவாட் திறன் கொண்ட இந்த அணு உலை நேற்று வர்த்தக ரீதியான மின் உற்பத்தியை தொடங்கியது.
இது தொடர்பாக காக்ரபார் அணுமின் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நமது முதலாவது 700 மெகாவாட் மின் உற்பத்தி அலகு, 2023-ம் ஆண்டு ஜூன் 30-ந் தேதி (நேற்று) காலை 10 மணியளவில் வணிகமயமாகிவிட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்' என தெரிவித்தார்.