பாஜக மீது அசைக்க முடியாத ஆதரவை வழங்கிய மக்களுக்கு நன்றி - பிரதமர் மோடி
|தெலுங்கானா மாநில மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்.
புதுடெல்லி,
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாலை 4.45 மணி நிலவரப்படி, மத்திய பிரதேசத்தில் 230 இடங்களில் 167 இடங்களிலும், ராஜஸ்தானில் 199 இடங்களில் 116 இடங்களிலும், சத்தீஷ்காரில் 90 இடங்களில் 55 இடங்களிலும் பாஜக முன்னிலை வகித்து வருகின்றது. 3 மாநிலங்களில் பாஜக தனித்து ஆட்சி அமைக்க உள்ளது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மக்கள் நல்லாட்சி மற்றும் வளர்ச்சிக்கான அரசியலைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதை இந்த முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
பாஜக மீது அசைக்க முடியாத ஆதரவை வழங்கிய மக்களுக்கு நன்றி. 4 மாநிலத்தில் பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி.
நல்ல நிர்வாகம், வளர்ச்சி, அரசியல் ஆகியவற்றுக்கு மக்கள் உறுதுணையாக நிற்கின்றனர் என்பதற்கு தேர்தல் முடிவுகள் சாட்சி. கடந்த சில ஆண்டுகளாக பாஜகவிற்கு வழங்கிய தொடர் ஆதரவிற்கு தெலுங்கானா மாநில மக்களுக்கும் நன்றி .
தெலுங்கானா மாநில மக்களுடைய எங்களது பிணைப்பு பிரிக்க முடியாதது, அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவோம். மக்கள் நலனுக்காக தொடர்ந்து அயராது பாடுபடுவோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.