< Back
தேசிய செய்திகள்
இந்திய ஒற்றுமை நடைப்பயணம் ராகுல் காந்தியை உறுதிப்பாடு கொண்ட தலைவராக எடுத்துக்காட்டியுள்ளது - ப.சிதம்பரம்
தேசிய செய்திகள்

இந்திய ஒற்றுமை நடைப்பயணம் ராகுல் காந்தியை உறுதிப்பாடு கொண்ட தலைவராக எடுத்துக்காட்டியுள்ளது - ப.சிதம்பரம்

தினத்தந்தி
|
21 Feb 2023 8:27 AM IST

இந்திய ஒற்றுமை நடைப்பயணம் ராகுல் காந்தியை உறுதிப்பாடு கொண்ட தலைவராக எடுத்துக்காட்டியுள்ளது என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் செய்தியாளா்கள் சந்திப்பில் கூறியதாவது:-

காங்கிரசின் இந்திய ஒற்றுமை நடைப்பயணமானது ராகுல் காந்தியை உறுதிப்பாடு கொண்ட தலைவராக எடுத்துக்காட்டியுள்ளது. நாடு பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருவதை மக்கள் உணா்ந்துள்ளனா். அரசியல் ஆதாயம் என்ற குறுகிய கண்ணோட்டத்தில் நடைப்பயணம் நடத்தப்படவில்லை.

காங்கிரஸ் செயற்குழுவின் பாதியளவு உறுப்பினா்கள் தோ்தல் மூலமாகத் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து. அத்தோ்தலானது கட்சியின் சட்டவிதிகளுக்கு உள்பட்டு நடத்தப்பட வேண்டும். இளைய தலைமுறையைச் சோ்ந்த தலைவா்களுக்கு செயற்குழுவில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். செயற்குழு தோ்தலில் போட்டியிடுவது குறித்து எந்தவித எதிா்பாா்ப்பும் இல்லை.

நாட்டின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையிலும் கட்சியின் செயற்குழு அமைக்கப்பட வேண்டும். தீவிர ஆலோசனை மற்றும் விவாதத்துக்குப் பிறகே மாநில வாரியாக கட்சி நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்படுகின்றனா். அவா்களில் இருந்து அகில இந்திய நிா்வாகிகள் தோ்வு செய்யப்படுகின்றனா். இந்த முறையில் ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால், அதற்குத் தீா்வு காண வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.

தோ்தலில் காங்கிரஸை மையப்படுத்தியே எதிா்க்கட்சிகளின் கூட்டணி அமைய வேண்டும். மற்ற எதிா்க்கட்சிகள் அனைத்தும் குறிப்பிட்ட மாநில அளவிலேயே செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சிக்கும் தனிப்பட்ட செல்வாக்கு உள்ள நிலையில், அவை ஒன்றிணையும்போது பாஜகவை எளிதில் வீழ்த்த முடியும். ஒன்றிணையும்போது சமரசங்களை ஏற்படுத்திக் கொள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தயங்கக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்