< Back
தேசிய செய்திகள்
ஆகஸ்ட் மாதத்தில் அதிக சரக்குகளை கையாண்டு இந்திய ரெயில்வே சாதனை

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

ஆகஸ்ட் மாதத்தில் அதிக சரக்குகளை கையாண்டு இந்திய ரெயில்வே சாதனை

தினத்தந்தி
|
5 Sep 2022 5:44 PM GMT

இந்திய ரெயில்வே ஆகஸ்ட் மாதத்தில் அதிக சரக்குகளை கையாண்டு, சாதனை படைத்துள்ளது.

புதுடெல்லி,

இந்திய ரெயில்வே ஆகஸ்ட் மாதத்தில் அதிக சரக்குகளை கையாண்டு, சாதனை படைத்துள்ளது. இந்திய ரெயில்வே இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில், 119.32 மெட்ரின் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கையாளப்பட்ட சரக்குகளின் அளவைவிட 7.86 சதவீதம் அதிகமாகும்.

இதன் மூலம் இந்திய ரெயில்வே, தொடர்ந்து 24வது மாதமாக சிறந்த மாதாந்தர சரக்குப் போக்குவரத்தை பதிவு செய்துள்ளது. இந்தாண்டின் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 வரையிலான காலகட்டத்தில், இந்திய ரெயில்வே 620.87 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டுள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது, இது 58.11 மெட்ரிக் டன் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்