< Back
தேசிய செய்திகள்
இந்த நிதியாண்டில் ஜனவரி வரை சரக்கு போக்குவரத்தில் ரெயில்வேக்கு வருவாய் அதிகரிப்பு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

இந்த நிதியாண்டில் ஜனவரி வரை சரக்கு போக்குவரத்தில் ரெயில்வேக்கு வருவாய் அதிகரிப்பு

தினத்தந்தி
|
7 Feb 2023 1:26 AM IST

இந்த நிதியாண்டில் ஜனவரி வரை சரக்கு போக்குவரத்தில் ரெயில்வேக்கு வருவாய் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரையிலான காலகட்டத்தில் 124 கோடி டன் சரக்குகள் ரெயில்வே துறையால் எடுத்துச்செல்லப்பட்டு உள்ளன. முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் 115 கோடி டன் சரக்குகளே கொண்டு செல்லப்பட்டன. ஆக, முந்தைய ஆண்டைவிட இந்த ஆண்டு 7 சதவீதம் அதிகம் ஆகும். அதேபோல், முந்தைய ஆண்டு ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 212 கோடியாக இருந்த சரக்கு ஏற்றுதல் வருவாய், தற்போது ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 387 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 12 கோடி டன் சரக்குகள் கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அது இந்த ஜனவரி மாதம் 13.4 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 4 சதவீதம் அதிகமாகும். இதேபோல கடந்த ஜனவரியில் ரூ.13 ஆயிரத்து 172 கோடியாக இருந்த வருவாய், இந்த ஜனவரியில் ரூ.14 ஆயிரத்து 709 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டைக்காட்டிலும் 13 சதவீதம் அதிகமாகும்.

இந்த தகவல்களை ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்