< Back
தேசிய செய்திகள்
அதிநவீன சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை
தேசிய செய்திகள்

அதிநவீன சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை

தினத்தந்தி
|
24 Jan 2024 10:36 PM IST

நிலத்திலுள்ள இலக்கைத் தாக்கும் குரூஸ் ஏவுகணையை போர்க்கப்பலில் இருந்து ஏவி கடற்படை பரிசோதனை செய்தது.

புதுடெல்லி,

இந்திய கடற்படை உள்நாட்டிலேயே தயாரித்த சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை பரிசோதனை இன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்த சோதனையை இந்திய கடற்படை நடத்தியது.

ஏவுகணையின் இந்த வெற்றி, கடலில் ஏற்படும் எந்தப் போர்ச் சூழலையும் சமாளிக்கும் வகையில் இந்தியக் கடற்படையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. கடற்படை கப்பலில் இருந்து ஏவக்கூடிய இந்த ஏவுகணை, நிலத்தில் உள்ள இலக்குகளை தெளிவாக தாக்கும் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பேசிய இந்திய கடற்படையின் செய்தித் தொடர்பாளர், "இந்திய கடற்படை மற்றும் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட் (பிஏபிஎல்) ஆகியவை இணைந்து தயாரித்த இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை பரிசோதனை இன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஏவுகணை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த கப்பல்களில் இருந்து இந்த சோதனையானது நடத்தப்பட்டது" என்று அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்