< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
நடுக்கடலில் தத்தளித்த வங்கதேச மீனவர்களை காப்பாற்றிய இந்திய கடற்படை
|21 Aug 2022 5:40 PM IST
இந்திய கடற்பகுதியில் தத்தளித்த 27 வங்கதேச மீனவர்களை இந்திய கடற்படையினர் மீட்டனர்.
கொல்கத்தா,
வங்காள விரிகுடா கடலில், அதிவேக காற்று காரணமாக படகு கவிழ்ந்து வங்காளதேச மீனவர்கள் இந்திய கடற்பகுதியில் நடு கடலில் தத்தளித்தனர். இந்த நிலையில், மீனவர்கள் சிலர் நடு கடலில் சிக்கி தவிப்பதை பார்த்த இந்திய கடற்படையினர், உடனடியாக கயிற்றை கடலில் வீசி அவர்களுக்கு உதவினர்.
ஏற்கெனவே 10 பேர் வங்காளதேச மீனவர்களை இந்திய கடற்படையினர் மீட்டனர். இதையடுத்து மேலும் 17 வங்காளதேச மீனவர்களை இந்திய கடற்படையினர் பாதுகாப்பாக காப்பாற்றினர்.