39 பேருடன் நடுக்கடலில் மூழ்கிய சீன மீன்பிடி படகு - மீட்புப்பணியில் இந்திய கடற்படை...!
|சீன கடற்படை கோரிக்கைவிடுத்தன் அடிப்படையில் இந்திய கடற்படை மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
டெல்லி,
சீனாவை சேர்ந்த மீன்பிடி படகு நேற்று இந்திய பெருங்கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தது. அந்த மீன்பிடி படகில் சீனா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 39 பேர் இருந்தனர்.
இதனிடையே, நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த படகு திடீரென விபத்தை சந்தித்தது. இதனால், படகு கடலில் மூழ்கதொடங்கியது. இந்தியப்பெருங்கடலில் 900 நாட்டிக்கல் மையில் தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து சீன கடற்படை இந்திய கடற்படைக்கு தகவல் கொடுத்தது. இதனை தொடர்ந்து விபத்து நடந்த பகுதிக்கு இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் மற்றும், ரோந்து விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது வரை விபத்துக்குள்ளான படகில் இருந்து 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியோரின் நிலை என்ன என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியோரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தேடுதல் பணியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானம், ஆஸ்திரேலிய கடற்படை, சீன கடற்படை உள்பட பல்வேறு நாடுகள் இணைந்துள்ளன.