< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தல்
|15 April 2024 5:02 AM IST
இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
ஈரான் நடத்திய திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் பதற்றமான சூழல் நீடிக்கும் நிலையில் அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியர்களும் அமைதியாக இருக்கவும், உள்ளூர் அதிகாரிகளால் வழங்கப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். தூதரகம் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
இந்தியர்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் இந்திய சமூக உறுப்பினர்களுடன் தூதரகம் தொடர்பில் உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.