< Back
தேசிய செய்திகள்
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி வாக்களித்தார்
தேசிய செய்திகள்

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி வாக்களித்தார்

தினத்தந்தி
|
26 April 2024 6:01 PM IST

13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

இந்திய நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த இந்த தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.இந்த நிலையில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு உத்தரப் பிரதசேம் மாநிலம் அம்ரோஹாவில் உள்ள வாக்குச்சாவடியில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தனது வாக்கினை பதிவு செய்தார்.

மேலும் செய்திகள்