< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
10 ஆயிரம் அடி உயரத்தில் பனிப்பிரதேசத்தில் தீபாவளி கொண்டாடிய இந்திய ராணுவ வீரர்கள்
|23 Oct 2022 6:08 PM IST
மிகவும் உயரமான பூஞ்ச் பனி பகுதியில், எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் தீபாவளியை கொண்டாடினர்.
ஜம்மு காஷ்மீர்,
ஜம்மு-காஷ்மீரில் 10 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள பனிப்பிரதேசத்தில் ராணுவ வீரர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.
மிகவும் உயரமான பூஞ்ச் பனி பகுதியில், எல்லை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை பரிமாறி கொண்டு, தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து கொண்ட ராணுவ வீரர்கள், எதற்கும் கவலைப்பட வேண்டாம் என தெரிவித்தனர்.