< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்

மணிப்பூரில் கணினி ஆய்வகம், திறன் மேம்பாட்டு மையத்தை திறந்து வைத்த இந்திய ராணுவம்

தினத்தந்தி
|
13 Oct 2024 10:28 AM IST

மணிப்பூரில் கணினி ஆய்வகம் மற்றும் திறன் மேம்பாட்டு மையத்தை இந்திய ராணுவம் திறந்து வைத்துள்ளது.

இம்பால்,

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில், அமைதியை நிலைநாட்டவும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் இந்திய ராணுவத்தின் சார்பில் 'ஆபரேஷன் சத்பவனா' திட்டத்தின் கீழ் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், மணிப்பூரின் கதிகு கரோங் பகுதியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் நவீன கணிணி ஆய்வகம் ஒன்றை இந்திய ராணுவம் திறந்து வைத்துள்ளது. இதன் திறப்பு விழாவில் ராணுவ உயர் அதிகாரிகள், கிராம தலைவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வகத்தில் 7 கணிணிகள், பிரிண்ட்டர் மற்றும் புரொஜக்டர் உள்ளிட்ட உபகரணங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல், பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் முயற்சியாக, தபவ் புதுனமெய் பகுதியில் இந்திய ராணுவத்தின் சார்பில் திறன் மேம்பாட்டு மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பெண்களுக்கு தையல், எம்பிராய்டரி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் பெண்கள் தங்களுக்கான வருமானத்தை ஏற்படுத்திக் கொண்டு சுய சார்புடன் வாழ்வதற்கு வழிவகை செய்ய முடியும் எனவும் இந்திய ராணுவத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்