< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விழுந்து விபத்து- பொதுமக்கள் 2 பேர் உயிரிழப்பு
|8 May 2023 10:57 AM IST
ராஜஸ்தானில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
ஜெய்பூர்,
இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 21 ரக விமானம் ராஜஸ்தானில் ஹனுமங்கர் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் வழக்கமான பயிற்சிக்கு சென்ற போது விபத்தில் சிக்கியதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. இந்த விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக விமானி பதுகாப்பாக உயிர் தப்பினார். விமான விபத்து குறித்து விமானப்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. விமான விபத்தால் பொதுமக்கள் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.