< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மேற்கு வங்கத்தில் இந்திய விமானப் படையின் பயிற்சி விமானம் விபத்து
|13 Feb 2024 7:14 PM IST
விமானத்தில் இருந்த 2 வீரர்களும் பாதுகாப்பாக வெளியேறியதாக விமானப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தா,
இந்திய விமானப் படைக்கு சொந்தமான 'ஹாக்' பயிற்சி விமானம், மேற்கு வங்க மாநிலம் பாஸ்சிம் மெதினிபூர் மாவட்டத்தில் உள்ள கலைகுண்டா பகுதியில் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தின்போது விமானத்தில் இருந்த 2 வீரர்களும் பாதுகாப்பாக வெளியேறியதாக விமானப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயிற்சி வீமானத்தில் வீரர்கள் பயிற்சி முடித்து திரும்பியபோது எதிர்பாராத விதமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிர்சேதமோ, பொதுமக்களின் சொத்துக்களுக்கு பாதிப்போ ஏற்படவில்லை என விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.