< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும் - வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்
|13 July 2022 2:45 AM IST
இலங்கைக்கு, இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார். இதுதொடர்பாக, திருவனந்தபுரத்தில் மந்திரி ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
"இலங்கையின் தற்போதைய நிலைமை பதற்றமானது மற்றும் சிக்கலானது. இந்தியாவின் அண்டை நாட்டினர் என்பதனால் இலங்கை மக்களுக்கு நமது ஆதரவை அளிக்க வேண்டும். அவர்களின் வாழ்க்கையில் மிகவும் கடினமான கட்டத்தை கடக்க அவர்களுக்கு உதவ நாம் விரும்புகிறோம்.
இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும். விரைவில் அங்கு நிலையான அரசு அமையும் என்ற நம்பிக்கை உள்ளது." என்று தெரிவித்தார்.
India will provide all necessary assistance to Sri Lanka - External Affairs Minister Jaishankar