< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
இந்தியா உண்மையிலேயே வெற்றிபெற பெண்களுக்கு சமஇடம் கொடுக்க வேண்டும் - ராகுல்காந்தி வலியுறுத்தல்
|15 Aug 2023 4:55 AM IST
சமுதாயத்தில் பெண்களுக்கு சமஇடம் கொடுத்தால்தான் இந்தியா உண்மையிலேயே வெற்றி பெறும் என்று ராகுல்காந்தி வலியுறுத்தினார்.
புதுடெல்லி,
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரில் இந்திரா பெல்லோஷிப் என்ற உதவித்தொகை வழங்கப்படுகிறது. இளைஞர் காங்கிரஸ் சார்பில் இந்த உதவித்தொகை அளிக்கப்படுகிறது.
அதற்கு விண்ணப்பிக்குமாறு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பெண்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதற்கான இணைப்பை அவர் பகிர்ந்துள்ளார்.
அதுதொடர்பாக ராகுல்காந்தி கூறியிருப்பதாவது:-
நமது சமுதாயத்தில் பெண்கள் சமஇடம் பெறும்போதுதான் இந்தியா உண்மையிலேயே வெற்றி பெறும்.
தலைவிதி
இந்திரா பெல்லோஷிப், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், அரசியலை மாற்றி அமைக்கவும் பயன்படுகிறது. அரசியலில் பெண்கள் தங்களுக்கான சரியான இடத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவின் தலைவிதியை வடிவமைக்க வேண்டும். அவர்களுக்கு சம உரிமை உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.