< Back
தேசிய செய்திகள்
276 மியான்மர் ராணுவ வீரர்களை திருப்பி அனுப்பும் இந்தியா

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

276 மியான்மர் ராணுவ வீரர்களை திருப்பி அனுப்பும் இந்தியா

தினத்தந்தி
|
22 Jan 2024 4:13 AM IST

எஞ்சிய பிற ராணுவ வீரர்களும் விரைவில் மியான்மருக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐஸ்வால்,

நமது அண்டை நாடான மியான்மரில் ராணுவ ஆட்சி நடக்கிறது. அங்கு ராணுவ ஆட்சியை எதிர்த்து பல்வேறு ஆயுத குழுக்கள் சண்டையிட்டு வருகின்றன. சமீபகாலமாக இந்த ஆயுத குழுக்கள் ராணுவ வீரர்களுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக மியான்மர் ராணுவ வீரர்கள் உயிருக்கு பயந்து எல்லை தாண்டி வந்து மிசோரம் மாநிலத்தில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த வாரம் சுமார் 600 ராணுவ வீரர்கள், எல்லை தாண்டி வந்து மிசோரமின் லாங்ட்லாய் மாவட்டத்தில் அடைக்கலம் புகுந்தனர். அவர்கள் அசாம் ரைபிள்ஸ் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து, மியான்மர் ராணுவ வீரர்களை அவர்கள் நாட்டுக்கு பத்திரமாக திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

அதன்படி இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) 276 மியான்மர் ராணுவ வீரர்கள் இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் மியான்மருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். எஞ்சிய பிற ராணுவ வீரர்களும் விரைவில் மியான்மருக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் கூறினர்.

மேலும் செய்திகள்