உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்: பிரான்ஸ் முதலிடம்- இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?
|6 நாடுகள் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளன. அவற்றில் பிரான்சும் ஒன்று. ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் ஸ்பெயின் ஆகிய நாடுகள் முதலிடத்தை பகிர்ந்துள்ளன.
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டுவருகிறது. ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதன் அடிப்படையில் இந்த தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், 6 நாடுகள் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளன.
அவற்றில் பிரான்சும் ஒன்று. ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் ஸ்பெயின் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் 194 நாடுகளுக்குப் பயணிக்கலாம், அல்லது அந்த நாடுகளுக்குப் பயணித்து, அங்கு சென்று இறங்கியதும் விசா பெற்றுக்கொள்ளலாம்
இந்த பட்டியலில், இந்தியா 80ஆவது இடத்தில் உள்ளது. இந்திய பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். முந்தைய ஆண்டு இந்திய பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி 60 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்ற நிலையிலிருந்து, தற்போது 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்ற நிலைக்கு முன்னேறியுள்ளது இந்தியா.