இந்தியா ஒற்றுமையாக இருந்து முன்னேற வேண்டும் - மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்
|பிரதமரின் தொலைநோக்கு பார்வையும், மக்களின் ஒத்துழைப்பும் புதிய இந்தியாவுக்கு வழிவகுக்கும் என மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
சிம்லா,
இமாச்சல பிரதேச மாநில நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும்போது, " இந்தியா சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறோம். நமது பிரதமரின் தொலைநோக்கு பார்வையும், மக்களின் ஒத்துழைப்பும் புதிய யுக இந்தியாவுக்கு வழிவகுக்கும். இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும். பிரிந்து செல்லாமல் முன்னேற வேண்டும்.
சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் பேசிய பிரதமர், அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவிற்கான சரியான திசையை காட்டியுள்ளார். புதிய இந்தியாவை உருவாக்குவது என்பது, வரலாற்றையும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பது ஆகும்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 2002-ம் ஆண்டு சிம்லா வந்திருந்தபோது பல்வேறு திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை அளித்தார். தற்போது உள்ள மத்திய அரசு மற்றும் பாஜகவின் வழிகாட்டுதலின் படி மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்கும். பல தொழிற்சாலைகளை தொடங்கினால் இங்கு வேலைவாய்ப்புகள் பெருகும். இவ்வாறு அவர் பேசினார்.