ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதியில் இந்தியா பெரும் சாதனை..!
|பாதுகாப்பு துறையில் இந்திய ஆயுதப் படைகள் முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றன.
புதுடெல்லி,
உலகின் மிகப் பெரிய பாதுகாப்பு ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் இருந்து, இந்தியா இப்போது மெதுவாக ஒரு ஏற்றுமதியாளராக வளர்ந்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவின் ராணுவ தளவடாங்கள் ஏற்றுமதி கடந்த 5 வருடங்களில் 334 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. கூட்டு முயற்சியின் விளைவாக தற்போது இந்தியாவில் இருந்து 75 நாடுகளுக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
அறிக்கைகளின்படி, இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி 2020-21ல் ரூ.8,434 கோடியாகவும், 2019-20ல் ரூ.9,115 கோடியாகவும், 2015-16ல் ரூ.2,059 கோடியாகவும் இருந்தது. இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி முக்கியமாக அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் மற்றும் தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் பிற நாடுகளுக்கு ஆகும்.
மேலும் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உலக அளவில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் டாப் 5 நாடுகள் பட்டியலில் இந்தியா பெறச் செய்ய இலக்கு நிர்ணயக்கப்பட்டுள்தாக பாதுகாப்புத் துறை செயலாளர் அஜய் குமார் தெரிவித்துள்ளார்.