< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
இந்தியா - சவுதி அரேபியா கூட்டு ராணுவ பயிற்சி ராஜஸ்தானில் தொடங்கியது
|29 Jan 2024 5:07 PM IST
இந்தியா மற்றும் சவுதி அரேபியாவை சேர்ந்த தலா 45 ராணுவ வீரர்கள் இந்த பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புது டெல்லி,
இந்தியா-சவுதி அரேபியா ராணுவத்தினர் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சியை தொடங்கியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் மகாஜனில் நடைபெற்றுவரும் இந்த ராணுவ பயிற்சியானது அடுத்த மாதம்10-ம் தேதி நிறைவடையும்.
இந்தியா மற்றும் சவுதி அரேபியாவை சேர்ந்த தலா 45 ராணுவ வீரர்கள் இந்த பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பாலைவனம் சார்ந்த நிலப்பரப்பில் பல்வேறு வகையான பயிற்சிகளை மேற்கொள்வதுடன், நேர்மறையான ராணுவ உறவுகளை உருவாக்குதல் மற்றும் ஒன்றாக செயல்படும் திறனை மேம்படுத்துதலே இந்த பயிற்சியின் நோக்கம் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.