< Back
தேசிய செய்திகள்
இந்தியாவில் மீண்டும் 17 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும் 17 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

தினத்தந்தி
|
18 July 2022 9:44 AM IST

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,935 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் நேற்று தொடர்ந்து 4-வது நாளாக 20 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்து 528 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இந்நிலையில் இன்று புதிதாக 16,935 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16 ஆயிரத்து 935 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,37,67,534 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 51 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,25,760 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 16,069 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,30,97,510 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 1,44,264 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 2,00,04,61,095 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,46,671 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 2,61,470 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 86,96,87,102 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்