< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
இந்திய சிறைகளில் இருந்து 22 பாகிஸ்தான் கைதிகள் விடுதலை - வாகா எல்லை வழியாக அனுப்பி வைப்பு
|21 May 2023 12:34 AM IST
இந்திய சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 22 பாகிஸ்தான் கைதிகள் வாகா எல்லை வழியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
அமிர்தசரஸ்,
பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட பாகிஸ்தானை சேர்ந்த ஏராளமான கைதிகள் இந்திய சிறைகளில் உள்ளனர். இதில் எல்லை தாண்டிய மீனவர்களும் அடங்குவர்.
இவ்வாறு அடைக்கப்பட்டிருந்த கைதிகளில் தண்டனை முடிவடைந்த 22 பேர் சிறைகளில் இருந்து விடுதலை ஆகினர். அவர்களிடம் சரியான ஆவணங்கள் எதுவும் இல்லாததால், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அவசர பயண சான்றிதழ்களை வழங்கியது.
இதைத்தொடர்ந்து இந்த 22 கைதிகளும் நேற்று பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் அட்டாரி-வாகா எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.