< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
நாம் நிம்மதியாக தூங்கும் அளவிற்கு நாட்டின் எல்லைகள் இன்னும் பாதுகாப்பானதாக இல்லை - ஆர்.எஸ்.எஸ். தலைவர்
|15 April 2023 3:03 AM IST
நாட்டின் வடக்கு, மேற்கு எல்லைகள் இன்னும் பாதுகாப்பானதாக இல்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்,
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்றி இந்து மத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், நம் நாடு தற்போது வளர்ந்துகொண்டிருக்கிறது. நாடு நற்பெயர் மற்றும் செல்வத்தை பெறுகிறது. மக்கள் மத்தியில் நாட்டுப்பற்று பரவுகிறது. அதன் காரணமாக தான் நாம் ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பேற்றோம்.
நாம் நிம்மதியாக தூங்கும் அளவிற்கு நமது நாட்டின் மேற்கு மற்றும் வடக்கு எல்லைகள் இன்னும் பாதுகாப்பாக இல்லை. நமது வீரர்களும் தொடர்ந்து விழித்துக்கொண்டிருக்க வேண்டியுள்ளது. நாமும் தொடர்ந்து விழித்துக்கொண்டிருக்க வேண்டியுள்ளது' என்றார்.