< Back
தேசிய செய்திகள்
சுகாதார துறையில் எந்த அச்சுறுத்தலையும் சந்திக்க இந்தியா தயார் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா பேச்சு
தேசிய செய்திகள்

சுகாதார துறையில் எந்த அச்சுறுத்தலையும் சந்திக்க இந்தியா தயார் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா பேச்சு

தினத்தந்தி
|
24 Sept 2022 4:00 AM IST

டெல்லியில் நேற்று இந்திய பொதுவிவகார மன்றத்தின் 9-வது வருடாந்திர கூட்டம் நடந்தது.

புதுடெல்லி,

டெல்லியில் நேற்று இந்திய பொதுவிவகார மன்றத்தின் 9-வது வருடாந்திர கூட்டம் நடந்தது. இதில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிய இந்தியா சுகாதார துறையில் எந்தவொரு அச்சுறுத்தலையும் சந்திக்க தயாராக இருக்கிறது. ஆரோக்கியமான இந்தியாதான் வளமான இந்தியாவாக இருக்கும்.பிரதமர் மோடி தலைமையில் புதிய இந்தியா, வல்லமை மிக்க நாடகி உள்ளது. எந்த நெருக்கடியையும் சந்திக்க நல்ல முறையில் தயாராக உள்ளது. பிராந்திய அளவில் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு 22 எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா வைரஸ் நுழைவதற்குள்ளேயே அதைப் புரிந்துகொள்வதற்கான முயற்சியை அரசு தொடங்கிவிட்டது. அதற்கேற்ப திட்டமிட்டது. அந்த தொற்று நோயை சந்திக்க தயாரானது. நாட்டில் சுகாதார மாடல்களை திட்டமிடவும், கட்டமைக்கவும் முழுமையான அணுகுமுறையை அரசு பின்பற்றுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்