< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அதிநவீன ஏவுகணை சோதனைக்கு இந்தியா திட்டம் - இந்திய பெருங்கடலில் இறங்கிய சீன உளவுக் கப்பல்
|5 Nov 2022 9:57 PM IST
இந்தியா ஏவுகணை சோதனையை மேற்கொள்ளவுள்ள நிலையில், அதனை சீனா உளவு பார்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,
இந்திய பாதுகாப்புக்காக மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தயாரிக்கும் ஏவுகணைகள் ஒடிசா கடற்கரையில் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் டி.ஆர்.டி.ஓ தயாரித்த அதி நவீன ஏவுகணை சோதனையை வரும்10,11 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், சீனாவின் யுவாங் வாங்4 உளவுக்கப்பல் இந்திய பெருங்கடலில் இறங்கி நோட்டமிட இருப்பதாக தெரிகிறது. இந்த கப்பலால், ஏவுகணையின் பாதை, துல்லியம், வேகம் மற்றும் வீச்சு திறனை கண்காணிக்க முடியும் என்றும் பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
சீன கப்பலின் நகர்வை இந்திய கடற்படை கூர்ந்து கண்காணித்து வருவதாக பாதுகாப்புத்துறை வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.