< Back
தேசிய செய்திகள்
இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு இந்தியாவில் துக்கம் அனுசரிப்பு - அரைக்கம்பத்தில் இந்திய தேசியக்கொடி

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு இந்தியாவில் துக்கம் அனுசரிப்பு - அரைக்கம்பத்தில் இந்திய தேசியக்கொடி

தினத்தந்தி
|
9 Sept 2022 11:10 PM IST

இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்தியாவில் நாளை மறுநாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக்குழுவினர் மகாராணி எலிசபெத்துக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மகாராணி எலிசபெத் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 96 ஆகும். இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்தியா சார்பில் நாளை மறுநாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் துக்கநாளில் தேசியக்கொடியை வழக்கமாக பறக்க விடப்படும் அனைத்து கட்டிடங்களிலும் அரைக்கம்பத்தில் தேசியக்கொடி பறக்க விடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்