< Back
தேசிய செய்திகள்
முட்டை குழம்பு செய்து தர மறுத்த ஆசை காதலியை கொடூரமாக கொன்ற காதலன்
தேசிய செய்திகள்

முட்டை குழம்பு செய்து தர மறுத்த ஆசை காதலியை கொடூரமாக கொன்ற காதலன்

தினத்தந்தி
|
19 March 2024 9:50 AM IST

லாலன் யாதவிற்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி 6 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார்.

கவுகாத்தி,

அரியானாவின் குருகிராம் பகுதியில் லாலன் யாதவ் மற்றும் அஞ்சலி ஆகியோர் ஒன்றாக வசித்து வந்துள்ளனர் . 35 வயதாகும் லாலன் யாதவ் ஏற்கனவே திருமணமானவர். இவரது மனைவி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் இவர் அஞ்சலி என்ற பெண்ணுடன் குருகிராம் பகுதியில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்துள்ளார்.

குடி போதைக்கு அடிமையான இவர் தினமும் போதை தலைக்கேறும் அளவிற்கு குடிப்பவர் என்று கூறப்படுகிறது . இந்நிலையில் சம்பவத்தன்று காதலன் லாலன் யாதவ் குடி போதையில் அஞ்சலியிடம் முட்டை குழம்பு சமைத்துக் கொடுக்குமாறு ஆசையாக கேட்டுள்ளார்.

ஆனால் அஞ்சலி முட்டை குழம்பு செய்து தர மறுத்துள்ளார் இதனால் ஆத்திரமடைந்த காதலன் லாலன் யாதவ் சுத்தியல் மற்றும் பெல்ட்டால் ஆசை காதலி அஞ்சலியை கொடூரமாக தாக்கிக் கொன்றுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அஞ்சலி அங்கேயே துடிதுடித்து இறந்துள்ளார். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அஞ்சலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போதையில் கிடந்த லாலன் யாதவை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியானாவில் முட்டை குழம்பு கேட்டு செய்து தர மறுத்த ஆசை காதலியை கொடூரமாக கொலை செய்த காதலனின் செயல் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்