டெல்லியில் குவாட் உச்சி மாநாடு நடத்த ஏற்பாடு.. ஜோ பைடன், புமியோ கிஷிடா பங்கேற்க வாய்ப்பு
|குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்குமாறு ஜோ பைடனுக்கு இந்தியா ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் இணைந்த குவாட் அமைப்பின் அடுத்த உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. மாநாட்டை அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இந்த தேதியில், மாநாட்டில் பங்கேற்பதற்கு ஜப்பானும், ஆஸ்திரேலியாவும் ஒப்புக்கொண்டுள்ளன. அமெரிக்காவும் நேர்மறையான பதிலையே தெரிவித்துள்ளது. அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் 27-ந்தேதி மாநாடு நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
ஜனவரி 26-ந்தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்குமாறு ஜோ பைடனுக்கு இந்தியா ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி பிளிங்கன் அடுத்த வாரம் டெல்லி வரும்போது, குடியரசு தின விழாவிற்கு ஜோ பைடன் வருகை, குவாட் உச்சி மாநாடு தேதி குறித்து இறுதி செய்யப்படலாம்.