< Back
தேசிய செய்திகள்
இந்தியாவில் 7 ஆயிரமாக சரிந்த கொரோனா பாதிப்பு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

இந்தியாவில் 7 ஆயிரமாக சரிந்த கொரோனா பாதிப்பு

தினத்தந்தி
|
25 April 2023 3:08 AM IST

இந்தியாவில் புதிதாக கொரோனா பாதிப்பு 7 ஆயிரமாக சரிந்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்தது. நேற்று முன்தினம் 10 ஆயிரத்து 112 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், 7 ஆயிரத்து 178 பேருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 48 லட்சத்து 99 ஆயிரமாக உயர்ந்தது.தொற்றில் இருந்து 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 11 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 43 லட்சத்துக்கு மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.

சமீபகாலமாக அதிகரித்து வந்த சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, 69 நாட்களுக்கு பிறகு குறைந்தது. 24 மணி நேரத்தில், 2 ஆயிரத்து 123 குறைந்தது. நேற்று காலை நிலவரப்படி, 65 ஆயிரத்து 683 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவுக்கு நேற்று முன்தினம் 29 பேர் பலியானார்கள். நேற்றைய பலி எண்ணிக்கை 16 ஆக குறைந்தது. அதில், கேரளாவில் விடுபட்ட 8 மரணங்களும் அடங்கும். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 345 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்