< Back
தேசிய செய்திகள்
இந்தியாவில் மேலும் 160 பேருக்கு கொரோனா பாதிப்பு

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

இந்தியாவில் மேலும் 160 பேருக்கு கொரோனா பாதிப்பு

தினத்தந்தி
|
1 Feb 2024 2:53 PM IST

கடந்த 24 மணி நேரத்தில் மராட்டியத்தில் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

புதுடெல்லி,

கொரோனாவின் புதிய வகையான 'ஜேஎன்.1' வகை தொற்று, பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்த வகை கொரோனா வேகமாகப் பரவுவதோடு, நோய்த் தடுப்பாற்றலையும் ஊடுருவுமென கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களாக ஜே.என்.1 வகை உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ ஆரம்பித்தது.

கடந்த மாதம் டிசம்பர் 5-ம் தேதி வரை இரண்டு இலக்கங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்தது. ஆனால் குளிர்காலம் தொடங்கிய பிறகு தொற்று பரவல் சற்று அதிகமானது. கடந்த டிசம்பர் 31-ம் தேதி அன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 841 பேர் பாதிக்கப்பட்டனர். இது கடந்த 2021-ம் ஆண்டு மே மாதத்தில் பதிவான அளவில் 0.2 சதவீதம் ஆகும்.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 160 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,338 ஆக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் காலை 8 மணிவரை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மராட்டியத்தில் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

மேலும் செய்திகள்