< Back
தேசிய செய்திகள்
ராஜஸ்தானில் இந்தியா-ஜப்பான் இடையே கூட்டுப்போர் பயிற்சி
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் இந்தியா-ஜப்பான் இடையே கூட்டுப்போர் பயிற்சி

தினத்தந்தி
|
26 Feb 2024 12:54 AM IST

ஜப்பான் வீரர்கள் 40 பேர் அடங்கிய குழு நேற்று ராஜஸ்தான் வந்தது.

புதுடெல்லி,

ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் உள்ள மகாஜன் ராணுவ தளத்தில் இந்தியா-ஜப்பான் ராணுவத்தின் கூட்டுப்போர் பயிற்சி நேற்று தொடங்கியது. மார்ச் 9-ந் தேதி வரை 2 வார காலத்துக்கு இப்பயிற்சி நடக்கிறது. பயிற்சியில், இந்திய ராணுவத்தின் ராஜ்புதானா ரைபிள்ஸ் படைப்பிரிவினரும், ஜப்பான் ராணுவத்தின் தரைப்படை வீரர்களும் பங்கேற்கிறார்கள்.

இதற்காக ஜப்பான் வீரர்கள் 40 பேர் அடங்கிய குழு நேற்று ராஜஸ்தான் வந்தது. இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தர்ம கார்டியன்' என்னும் வருடாந்திர ராணுவ பயிற்சியில் இரு ராணுவமும் யுத்த யுக்திகளை பகிர்ந்து கொள்ள வாய்ப்பாக அமையும். போர் காலங்களில் ராணுவ வீரர்களின் செயல்பாடு, தத்தமது அனுபவங்கள், தொழில்நுட்ப அறிவு ஆகியவை பகிர்ந்து கொள்ளப்படும். உடல் தகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு கூட்டாக திட்டமிடல், கூட்டு வியூகம் உள்ளிட்ட பயிற்சிகள் மேற்கொள்ளப்படும். இதனால் இருநாடுகளிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரிப்பதுடன், இருதரப்பு உறவும் வலுப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்