'உலகிலேயே அதிவேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடு இந்தியா' - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
|அதிவேகமாக பொருளாதாரம் வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தை தக்க வைக்கும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தின் மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது;-
"நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க மூலதன செலவு அதிகரிக்கப்படுகிறது. வளர்ச்சிக்கான தேவை, பொருளாதார ஸ்திரத்தன்மையை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பை ஏற்படுத்த சிறு, குறு தொழில்களின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே அதிவேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. மேலும் வரும் ஆண்டும் அதிவேகமாக பொருளாதாரம் வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தை தக்க வைக்கும்."
இவ்வாறு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும் வேலைவாய்ப்பு, வரி விதிப்பு ஆகியவை தொடர்பாக என்னென்ன பலன்களை பட்ஜெட் கொடுத்திருக்கிறது என்பது குறித்து பட்டியலிட்டு பட்ஜெட் விவாதம் தொடர்பான பதிலுரையில் நிர்மலா சீதாராமன் பேசினார்.