விண்வெளித்துறையில் சீனாவின் வர்த்தகத்தை கைப்பற்றும் இந்தியா...!
|சர்வதேச அரசியல் நிலவரம், நம்பகத்தன்மை, குறைந்த செலவு போன்றவற்றால், விண்வெளி சந்தையில் உலக நாடுகளின் நம்பிக்கைக்குரிய நாடாக இந்தியா முன்னேறி வருகிறது.
புதுடெல்லி:
விண்வெளி துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு இணையாக இந்தியாவும் வளர்ச்சியடைந்து வருகிறது.
அதிவிரைவான இணையதள சேவையை வழங்குவதற்காக, செயற்கைக்கோள்களை விண்வெளியில் செலுத்தி சுற்று வட்டப்பாதையில் நிறுத்தும் வர்த்தகம் செழிப்படைந்து வருகிறது.
செயற்கைக்கோள்கள் தகவல் தொடர்புக்கு மட்டும் பயன்படுவதில்லை. நேவிகேஷன், வானிலை முன்னறிவிப்பு, புவி கண்காணிப்பு, நகர்ப்புற திட்டமிடல், போக்குவரத்து கட்டுப்பாடு, மருந்து உற்பத்தி மற்றும் தொலைதூர தடுப்பு ஆகிய துறைகளில் விண்வெளி தொழில்நுட்பம் நவீன காலத்தில் பயன்படுத்தப்படுகிறது.
சர்வதேச அரசியல் நிலவரம், நம்பகத்தன்மை, குறைந்த செலவு போன்றவற்றால், விண்வெளி சந்தையில் உலக நாடுகளின் நம்பிக்கைக்குரிய நாடாக இந்தியா முன்னேறி வருகிறது.
பெரும் நிதிச்சுமை காரணமாக, உலக நாடுகள் விண்வெளி ஆராய்ச்சிக்கான நிதியை கடுமையாக குறைத்து வருகின்றன. இந்த நிலை தனியார் நிறுவனங்களுக்கு இது சாதகமாக உள்ளது.
அமெரிக்காவின் பெரும் பணக்கார தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ,'பேஸ்எக்ஸ்' நிறுவனம் தற்போது விண்வெளி வர்த்தகத்தில் கொடி கட்டி பறக்கிறது. அந்நிறுவனத்தில் 2020ல் 36 லட்சம் கோடி ரூபாயாக இருந்த விண்வெளி வர்த்தகம், 2025ல் 49 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
அதி விரைவு இன்டர்நெட் சேவைக்கான தேவை உலகெகும் உள்ளதால்,
செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்புவது பெரிய வர்த்தகமாக மாறி உள்ளது.
உக்ரைன் போர் மற்றும் அமெரிக்காவுடனான சீனாவின் பதற்ற சூழல் ஆகியவற்றால் புதுப்புது வாடிக்கையாளர்களை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தற்போது செயற்கைக்கோள் ஏவும் பணிக்கு தற்போது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஒன்றையே சார்ந்து இருக்க வேண்டியுள்ளது.இந்த சூழல், இந்தியாவுக்கு அதிரடியாக கைகொடுத்துள்ளது.
இஸ்ரோவின், நியூபே இந்திய நிறுவனம், வர்த்தக ரீதியில் செயற்கைக்கோள்களை அனுப்புவதற்கான ஒப்பந்தகளை பெற்று வருகிறது.
இதுபற்றி விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனங்களில் ஒன்றான நார்தர்ன்ஸ்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை நிபுணர் டல்லாஸ் கசபோஸ்கி கூறும்போது
"அரசியல் ரீதியாக இந்தியா ஒரு சிறந்த இடத்தில் உள்ளது. ஒருவேளை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஆனது, நிறைந்து விட்டாலோ, பரபரப்புடன் இயங்கி அல்லது அதிக பொருட்செலவை ஏற்படுத்தினாலோ நீங்கள் வேறிடம் தேட வேண்டியிருக்கும்.
அதற்கு சீனாவையும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது. சீனாவின் மேற்கத்திய தொழில்நுட்பம் சார்ந்த விசயங்களால், பல செயற்கைக்கோள் இயக்கும் நிறுவனங்களுக்கு சீனா ஒரு சிறந்த தேர்வாக இருக்காது.
அமெரிக்கா மற்றும் பிற சக்தி படைத்த நாடுகளான ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா நெருங்கி செயலாற்றி வருகிறது.போட்டி நாடுகளை விட இந்தியாவில் செலவும் குறைவு இதற்கு இந்தியாவின் நியூஸ்பேஸ் என்ற நிறுவனம் கைகொடுத்துள்ளது.'' என தெரிவித்தார்.
இந்தியாவில் இருந்து செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும்போது தோல்வி அடைவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்பது ஏற்கப்பட்டாலும், இந்தியா திறமையாகவே செயல்படுகிறது என ஹார்வர்டு பல்கலை கழகத்தின் வானியல் இயற்பியலாளர் ஜோனாதன் மெக்டோவல் கூறுகிறார்.
அதற்கு சான்றாக, 2013-ம் ஆண்டில் செவ்வாய்க்கு இந்தியா அனுப்பிய ஆர்பிட்டர் ஒன்றின் செலவு, அதே ஆண்டில் நாசா அனுப்பிய விண்வெளி ஆய்வு விண்கலத்தின் செலவை விட 10-ல் ஒரு பங்கு அளவே இருந்தது. அதனால், குறைந்த செலவில் பெரிய ஏவுதிறனுடன் உள்ள நாடுகள் அதிகம் இல்லை என தெரிவித்தார்.