வறுமைக்கு எதிரான போரில் தொழில்நுட்பத்தை ஆயுதமாக இந்தியா பயன்படுத்துகிறது; பிரதமர் மோடி
|பெங்களூரு தொழில்நுட்ப மாநாடு இன்று தொடங்கியது. காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
பெங்களூரு,
பெங்களூரு தொழில்நுட்ப மாநாடு இன்று தொடங்கியது. காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 9 முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இதில் 20-க்கும் மேற்பட்ட உற்பத்தி பொருட்கள் வெளியிடப்படுகின்றன.
இந்த மாநாட்டில் 575-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த புத்தொழில் நிறுவனங்கள்(ஸ்டார்ட்அப்) கலந்து கொள்கின்றன. உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிபுணர்கள் கலந்து கொள்கிறார்கள். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் முதலீட்டாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
காணொலி வாயிலாக மாநாட்டை தொடங்கி வைத்த பிறகு பிரதமர் மோடி பேசியதாவது:- வறுமைக்கு எதிரான போரில் தொழில்நுட்பத்தை ஆயுதமாக இந்தியா பயன்படுத்துகிறது. முதலீட்டாளர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் நாடாக இந்தியா அறியப்படுகிறது. 2021- ஆம் ஆண்டில் இருந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை இருமடங்கு ஆகியுள்ளது" என்றார்.