< Back
தேசிய செய்திகள்
உலக எரிசக்தி சவால்களை இந்தியா சிறப்பாக எதிர்கொண்டு வருகிறது- மத்திய மந்திரி பேச்சு
தேசிய செய்திகள்

உலக எரிசக்தி சவால்களை இந்தியா சிறப்பாக எதிர்கொண்டு வருகிறது- மத்திய மந்திரி பேச்சு

தினத்தந்தி
|
14 Oct 2022 10:57 PM IST

தெற்காசிய புவி அறிவியல் மாநாட்டில் மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி உரையாற்றினார்.

சிதாபுரா,

ராஜஸ்தான் மாநிலம் சிதாபுராவில் உள்ள ஜெய்ப்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 3 நாள் தெற்காசிய புவி அறிவியல் மாநாட்டில் உரையாற்றிய மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி, கூறியுள்ளதாவது:

பெட்ரோலில் எத்தனால் கலப்பு 2022 மே மாதத்தில் 10 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2.7 மில்லியன் டன் கார்பன்டை ஆக்சைடு உமிழ்வைக் குறைத்திருக்கிறது, இது சுற்றுச்சூழலுக்கு மிகவும் நன்மை அளிக்கும். அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் எரிசக்தி தேவை இரட்டிப்பாகும் என்றும், 2050ம் ஆண்டுக்குள் இயற்கை வாயுவின் தேவை ஐந்து மடங்கு அதிகரிக்கும் என்று சர்வதேச எரிசக்தி முகமை கணித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி ஹர்தீப்சிங் பூரி, நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் வகையில், அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை உள்ளிட்ட உலக எரிசக்தி சவால்களை இந்திய அரசு சிறப்பாக எதிர்கொண்டு வருகிறது என்றார்.

இந்தியாவில் நாளொன்றுக்கு 5 மில்லியன் பீப்பாய்கள் பெட்ரோலியம் பயன்படுத்தப்படுவதாகவும், இது தற்போது 3 சதவீதம் அதிகரித்து வருகிறது என்றும், கூறினார்.

மேலும் செய்திகள்