< Back
தேசிய செய்திகள்
மனித உரிமைகளை பாதுகாப்பதில் உலகிற்கே இந்தியா முன் உதாரணம் - துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பெருமிதம்
தேசிய செய்திகள்

மனித உரிமைகளை பாதுகாப்பதில் உலகிற்கே இந்தியா முன் உதாரணம் - துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பெருமிதம்

தினத்தந்தி
|
11 Dec 2023 1:42 AM IST

ஜனநாயகத்தின் அடிநாதமாக மனித உரிமைகள் இருக்கின்றன என்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

மனித உரிமைகளை பாதுகாப்பதில் இந்தியா உலகிற்கே முன்மாதிரியாக திகழ்வதாக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தேசிய மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பது நமது பாரம்பரியத்திலும் அரசியல் சாசனத்திலும் ஒருங்கிணைந்துள்ளது.

ஜனநாயகத்தின் அடிநாதமாக மனித உரிமைகள் இருக்கின்றன. இந்தியா உலகிற்கே முன் மாதிரியாக இருக்கின்றது" என்று கூறினார். தொடர்ந்து பேசிய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி அருண் மிஸ்ரா, "மனித உரிமைகளுக்கான சர்வதேச பிரகடன லட்சியங்கள் நமது விழுமியங்களை போலவே இருக்கின்றன" என்று கூறினார்.

மேலும் செய்திகள்