< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
'இதுவரை நாம் கண்டிராத மிகவும் வெற்றிகரமான ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்தியுள்ளது' - அமெரிக்க தூதர் பேச்சு
|26 Sept 2023 8:11 PM IST
இதுவரை கண்டிராத வெற்றிகரமான ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்திக் காட்டியுள்ளதாக அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்தார்.
புதுடெல்லி,
20-வது இந்திய-அமெரிக்க பொருளாதார உச்சி மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, இந்தியா மிகவும் வெற்றிகரமான ஜி-20 மாநாட்டை நடத்தியிருப்பதாக புகழாரம் சூட்டினார். மேலும் இது தொடர்பாக அவர் கூறியதாவது;-
"இந்தியாவின் அற்புதமான வளர்ச்சியும், உயர்வும், உலகில் அதன் தலைமைத்துவமும் சேர்ந்து இதுவரை நாம் கண்டிராத வெற்றிகரமான ஜி-20 மாநாட்டை நடத்திக் காட்டியுள்ளது. இந்தியாவிற்கு இது ஒரு அற்புதமான விண்வெளி ஆண்டு. நிலவின் இருண்ட பக்கத்தில் இந்தியா தரையிறங்கியுள்ளது. இதற்கு முன்பு வெறும் நான்கு நாடுகள் மட்டுமே செய்ததை, மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும், வெற்றிகரமாகவும் இந்தியா செய்துள்ளது."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.