< Back
தேசிய செய்திகள்
இந்தியாவில் புத்தொழிலுக்கு உகந்த சூழல் நிலவுகிறது; கவர்னர் தாவர்சந்த்கெலாட் பேச்சு
தேசிய செய்திகள்

இந்தியாவில் புத்தொழிலுக்கு உகந்த சூழல் நிலவுகிறது; கவர்னர் தாவர்சந்த்கெலாட் பேச்சு

தினத்தந்தி
|
22 Aug 2022 9:21 PM GMT

இந்தியாவில் புத்தொழிலுக்கு உகந்த சூழல் நிலவுகிறது என்று கவர்னர் தாவர்சந்த்கெலாட் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

ஒரு தனியார் பல்கலைக்கழகம் சார்பில் புத்தொழில் (ஸ்டார்ட்அப்) குறித்த மாநாடு பெங்களூருவில் நடைபெற்றது. இதில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-

வானிலை மாற்றத்தால் ஏற்படும் தொந்தரவுகளை தடுக்கும் வகையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த புத்தொழில்களை தொடங்க வேண்டியது இன்றைய தேவையாக உள்ளது. இந்தியாவில் பெரிய அளவில் புத்தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. புத்தொழிலுக்கு உகந்த சுற்றுச்சூழல் இங்கு நிலவுகிறது. மத்திய அரசு சுற்றுச்சூழலுக்கு உகந்த சிந்தனைகளை ஊக்குவிக்கிறது.

இவ்வாறு தாவர்சந்த் கெலாட் பேசினார்.

மேலும் செய்திகள்