< Back
தேசிய செய்திகள்
இஸ்லாமிய நாடுகளுடன் இந்தியா வலிமையான உறவை கொண்டுள்ளது - பிரதமர் மோடி
தேசிய செய்திகள்

இஸ்லாமிய நாடுகளுடன் இந்தியா வலிமையான உறவை கொண்டுள்ளது - பிரதமர் மோடி

தினத்தந்தி
|
3 Dec 2022 12:52 AM IST

2014-ம் ஆண்டுக்கு பின் இஸ்லாமிய நாடுகளுடன் இந்தியா வலிமையான உறவை கொண்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

காந்தி நகர்,

182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, கடந்த 1-ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில் வரும் 5-ம் தேதி 2-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

முதற்கட்ட தேர்தல் ஏற்கனவே நடந்த முடிந்த நிலையில் 2-ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரித்து அகமதாபாத்தில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது, 2014-ம் ஆண்டுக்கு பின் இஸ்லாமிய நாடுகளுடன் இந்தியா வலிமையான உறவை கொண்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, பக்ரைன் ஆகிய நாடுகள் தங்கள் நாடுகளின் உயரிய விருதுகளை எனக்கு கொடுத்துள்ளது எனக்கு மட்டுமின்றி ஒவ்வொரு குஜராத்திக்கும் பெருமைக்குரிய விஷயம்' என்றார்.

மேலும் செய்திகள்