"மேக் இன் இந்தியா" இந்தியாவில் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி அதிகரிப்பு...!
|இந்தியாவை, பாதுகாப்பு துறையில் உற்பத்தி மையமாக மாற்றுவதற்கு மத்திய அரசு அனைத்து.முயற்சிகளையும் மேற்கொள்ளும்.
புதுடெல்லி
கடந்த 2022-23 நிதியாண்டில் இந்தியா ரூ.15,920 கோடி மதிப்புள்ள ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்துள்ளதாக மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங் கூறி இருப்பதாவது:-
கடந்த 2022-23 நிதி ஆண்டில் இந்தியாவின் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி ரூ.15,920 கோடி. 2020-21ல் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி ரூ.8,434 கோடியாகவும், 2019-20ல் ரூ.9,115 கோடியாகவும், 2018-19ல் ரூ.10,745 கோடியாகவும் இருந்துள்ளது. 2017-18ல் ரூ.4,682 கோடியாகவும், 2016-17ல் ரூ.1,521 கோடியாகவும் இது இருந்துள்ளது.
வரும் 2024-25 நிதி ஆண்டுக்குள் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி ரூ.1,75,000 கோடியாக இருக்க வேண்டும் என்றும், ஏற்றுமதி ரூ.35,000 கோடியாக இருக்க வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங்,
உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் உத்வேகம் அளிக்கும் தலைமையின் கீழ் வரும் காலங்களில் நமது ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி மிகப் பெரிய அளவில் அதிகரிக்கும் என்றும் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதனை மேற்கோள் காட்டி பிரதமர் நரேந்திர மோடிவெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இது இந்தியாவின் திறமை மற்றும் ' மேக் இன் இந்தியா' மீதான ஆர்வத்தின் வெளிப்பாடு.இது இந்தியாவின் திறமை மற்றும் ' மேக் இன் இந்தியா'மீதான ஆர்வத்தின் வெளிப்பாடு. கடந்த சில ஆண்டுகளாக இந்த துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் நல்ல பலனை தருவதை காட்டுகிறது.
இந்தியாவை, பாதுகாப்பு துறையில் உற்பத்தி மையமாக மாற்றுவதற்கு மத்திய அரசு அனைத்து.முயற்சிகளையும் மேற்கொள்ளும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.