பிலிப்பைன்சுக்கு பிரமோஸ் ஏவுகணைகளை வழங்கிய இந்தியா
|இந்தியாவிடமிருந்து பிரமோஸ் ஏவுகணைகளை வாங்க பிலிப்பைன்ஸ் ஒப்பந்தம் செய்தது.
டெல்லி,
இந்தியா - ரஷியா தொழில்நுட்பத்தில் உருவான இந்தியாவில் பிரமோஸ் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. பிரமோஸ் ஏவுகணை இந்திய படைகளில் இணைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பிரமோஸ் ஏவுகணைகளை வாங்க உலகின் பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில் இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணைகளை பிலிப்பைன்ஸ் கொள்முதல் செய்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே 2022ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தப்படி இந்தியாவிடமிருந்து 375 மில்லியன் டாலர்களுக்கு பிரமோஸ் ஏவுகணையை பிலிப்பைன்ஸ் கொள்முதல் செய்தது.
இந்நிலையில், பிலிப்பைன்ஸ் கொள்முதல் செய்த பிரமோஸ் ஏவுகணையை இந்தியா இன்று வழங்கியுள்ளது. இந்தியாவில் இருந்து விமானப்படை விமானம் சி-17 மூலம் பிரமோஸ் ஏவுகணை அதற்கான பேட்டரி, உபகரணங்கள் பிலிப்பைன்ஸ் கொண்டு செல்லப்பட்டன. பிலிப்பைன்ஸ் கொண்டுசெல்லப்பட்ட பிரமோஸ் ஏவுகணை அந்நாட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.