< Back
தேசிய செய்திகள்

கோப்புப்படம்
தேசிய செய்திகள்
அரிசி ஏற்றுமதிக்கு தடை..!! மத்திய அரசு அறிவிப்பு

21 July 2023 12:46 AM IST
அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
பாசுமதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
அதே சமயம் இந்த அறிவிப்புக்கு முன் கப்பலில் ஏற்றப்பட்ட அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மற்ற நாடுகளின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் வழங்கும் அனுமதியின் அடிப்படையிலும் குறிப்பிட்ட அரிசி ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. விலைவாசியை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.