< Back
தேசிய செய்திகள்
நைஜர் நாட்டில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள் - இந்தியர்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள்
தேசிய செய்திகள்

நைஜர் நாட்டில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள் - இந்தியர்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள்

தினத்தந்தி
|
11 Aug 2023 11:59 PM IST

நைஜர் நாட்டில் இருந்து உடனடியாக வெளியேறியும்படி இந்தியர்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

டெல்லி,

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் அதிபர் முகமது பாசும் தலைமையிலான ஆட்சி நடந்து வந்தது. ஆனால் அந்த நாட்டின் ராணுவம் திடீரென அரசாங்கத்துக்கு எதிராக திரும்பியது. அதிபர் முகமது பாசுமை கடந்த 26ம் தேதி ராணுவம் சிறைபிடித்தது. ராணுவ தளபதி கர்னல் அமடொ அப்ட்ரனி தன்னை புதிய அதிபராக அறிவித்தார். நைஜரில் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

மேலும், ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதால் நைஜரில் குழப்பம் நீடித்து வருகிறது. உள்நாட்டு போர் மூளும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.

இந்நிலையில், நைஜரில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறும்படி மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்ச செய்தித்தொடர்பாளர் கூறுகையில், நைஜர் நாட்டின் நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்துவருகிறது. நைஜர் நாட்டில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். நைஜர் நாட்டில் இந்தியர்கள் 250க்கும் மேற்பட்டோர் உள்ளனர்' என்றார்.

மேலும் செய்திகள்