< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
'இந்தியா' கூட்டணி கூட்டம்: மும்பை விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
|1 Sept 2023 2:02 AM IST
விமான நிலையத்தில் மும்பை தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மும்பை,
மும்பையில் 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் கூட்டம் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 11.45 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பை சென்றடைந்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், டி.ஆர். பாலு எம்.பி.யும் சென்று இருந்தார்.
மும்பை சென்ற மு.க.ஸ்டாலினை மும்பையில் 'இந்தியா' கூட்டணி கூட்டத்தை நடத்தும் மகாவிகாஸ் அகாடி கூட்டணி சார்பில் சச்சின் ஆஹிர் எம்.எல்.சி., முன்னாள் மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர். மேலும் விமான நிலையத்தில் மும்பை தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.