< Back
தேசிய செய்திகள்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானங்களை பயன்படுத்த அர்ஜென்டினா விருப்பம்!
தேசிய செய்திகள்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானங்களை பயன்படுத்த அர்ஜென்டினா விருப்பம்!

தினத்தந்தி
|
27 Aug 2022 2:29 PM IST

அர்ஜென்டினா பாதுகாப்பு துறையில் இந்தியாவின் தேஜஸ் போர் விமானங்களை பயன்படுத்த ஆர்வம் காட்டியுள்ளது.

பியூனஸ் அயர்ஸ்,

அர்ஜென்டினா பாதுகாப்பு துறையில் அந்நாட்டின் விமானப்படைக்கு, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானங்களை பயன்படுத்திக்கொள்ள ஆர்வம் காட்டியுள்ளது.

வெளியுறவுத்துறை மந்திரி டாக்டர். எஸ். ஜெய்சங்கர் மற்றும் அர்ஜென்டினா வெளியுறவுத்துறை மந்திரி சாண்டியாகோ கபிரோ ஆகியோர் தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடைபெற்ற இந்தியா-அர்ஜென்டினா கூட்டு ஆணையத்தின் ஆலோசனை கூட்டத்திற்கு தலைமை தாங்கினர்.

இந்த சந்திப்பின் போது, பாதுகாப்பு, அணுசக்தி, விண்வெளி, மருந்து, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், யோகா, பருவநிலை மாற்றம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவற்றில் இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.

வெளியுறவுத்துறை மந்திரி டாக்டர். எஸ் ஜெய்சங்கர், தேஜஸ் போர் விமானத்தில் அர்ஜென்டினாவின் ஆர்வத்தை ஏற்றுக்கொண்டார். இருதரப்பு உறவுகளின் மூலோபாய பங்களிப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து அவர் வலியுறுத்தினார்.

ஆயுதப் படைகள், பாதுகாப்புப் பயிற்சி மற்றும் பாதுகாப்பு தொடர்பான உபகரணங்களின் கூட்டு உற்பத்திக்கான ஒத்துழைப்பு ஆகியவற்றில் இருதரப்பும் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டுள்ளன.

இருதரப்பு வர்த்தகம் 2021இல் 5.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியதன் மூலம், அர்ஜென்டினாவின் 4வது பெரிய வர்த்தக கூட்டாளி இந்தியா மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், அர்ஜென்டினாவுடன் தடுப்பூசி தயாரிப்பில் இந்தியா இணைந்துள்ளது. இதன்மூலம் தடுப்பூசி தயாரிப்பிற்கான ஒரு பிராந்திய தளமாக அர்ஜென்டினா மாறுகிறது.

மேலும் செய்திகள்